தனது Fawlty Towers தொடரின் புதிய பகுதிகளை பிபிசி-யில் காட்டலாகாது என்கிறார் ஜோன் கிளீஸ்.

1970 களில் வெளியாகிய மிகப் பிரபலமான நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்று Fawlty Towers என்றால் அது மி கையில்லை. இங்கிலாந்தின் தென்கிழக்குக் கரையோரப்பகுதியில் ஹோட்டல் நடத்து பசில், சிபில் தம்பதிகளின் வியாபாரம், திருமண பந்தங்கள் பற்றிய அந்தத் தொடர் பலதடவைகள் British Academy Film Awards  பரிசுகளை வென்றது. அதைத்தவிர வேறு பரிசுகளையும் வென்று அதன் கதாபாத்திரங்களுக்கு சாகாவரம் கொடுத்தது.

பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடர்களின் சரித்திரத்தில் இதுவரை வெளியாகியவற்றில் மிகப்பிரபலமானது எனக் கணிக்கப்பட்ட Fawlty Towers  இன் புதிய பாகமொன்றைப் படமாக்கத் தயாராகி வருகிறார் ஜோன் கிளீஸ். அவரும் அவரது மனைவியாக இருந்த கொனி பூத்தும் அதை எழுதியிருந்தார்கள். பிபிசி நிறுவனம் அதைத் தயாரித்து அதன் உரிமைகளைக் கொண்டிருக்கிறது.

புதியதாக எடுக்கப்படவிருக்கும் பாகத்தின் அத்தியாயங்கள் ஜோன் கிளீஸ் தனது மகளுடன் சேர்ந்து எழுதித் திட்டமிடப்பட்டவையாகும். கரீபியப் பகுதியிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் அந்தக் கடை நடைபெறுகிறது. மகளுடன் சேர்ந்து கடந்த 16 வருடங்களாக அதை எழுதிவருவதாக ஜோன் கிளீஸ் தெரிவித்தார். புதிய தொடரில்     

மறைந்த Andrew Sachs, வயதாகிவிட்ட Prunella “Pru” Scales ஆகியோர் இருக்கமாட்டார்கள்..

ஜோன் கிளீஸ் தனது புதிய திட்டத்தை அறிவித்ததுடன் அது பிபிசி-யில் காட்டப்பட மாட்டாது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான காரணம் பிபிசி-யில் தனது கற்பனை வளத்தைப் பிரயோகிக்க முழுமையான சுதந்திரம் கிடைக்காது என்று காரணம் தெரிவித்திருக்கிறார். Castle Rock Entertainment என்ற நிறுவனம் கிளீஸின் புதிய அத்தியாயங்களைத் தயாரிக்கவிருக்கிறது.

கிளீஸுக்கும் பிபிசிக்கும் Fawlty Towers தொடர் சம்பந்தமாக முன்னரே பல உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தொடரில் பாவிக்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள், சம்பவங்கள் சில காலனித்துவக்காலத்தைப் பிரதிபலிக்கின்றன,  இந்தியர்கள், ஜேர்மனியர்களின் மனங்களைப் புண்படுத்துகின்றன போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டு அத்தொடரில் சில பாகங்களை பிபிசி காலப்போக்கில் வெட்டியெறிந்துவிட்டதை கிளீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *