பெயரர்களைச் சந்திக்க விரும்பான பிள்ளைகளை அதற்காகக் கட்டாயப்படுத்த முடியாது என்றது இத்தாலிய உச்ச நீதிமன்றம்.
தனது பாட்டன், பாட்டியைச் சந்திக்க விரும்பாத பிள்ளைகளை அதற்காகக் கட்டாயப்படுத்த முடியாது என்று இத்தாலியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிலான் நீதிமன்றம் ஏற்கனவே கொடுத்திருந்த தீர்ப்பை ஏற்காத பெற்றோர் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்மாதிரிகையான, அறுதித் தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது.
இளவயதினருக்கான மிலான் நீதிமன்றத்தில் பிள்ளைகளின் தந்தைவழிப் பெற்றோரும், மாமனும் கொடுத்த வழக்கில் குறிப்பிட்ட பிள்ளைகள் அம்முதியவர்களைக் கட்டாயமாகச் சந்திக்கவேண்டும் என்றிருந்தது. சமூகசேவை ஊழியர் ஒருவர் பிரசன்னமளிக்க அப்பிள்ளைகள் தமது தாத்தா, பாட்டியைச் சந்திக்க நீதிமன்றம் 2019 இல் ஒழுங்குசெய்திருந்தது.
குறிப்பிட்ட குடும்பத்துக்குள் இருக்கும் சச்சரவுகளால் பிள்ளைகளின் பெற்றோர்கள் தமது பிள்ளை பெயரன், பேத்தியைச் சந்திப்பதை அவ்வர்கள் மறுத்தார்கள். பிள்ளைகளின் விருப்பமும் தெரிந்துகொள்ளப்பட்டது. அவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்பது தெரியவந்தது. 12 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் தமது விருப்பத்தைத் தெரிந்தெடுக்கக்கூடியவர்கள், அவர்களுடைய நிலைப்பாடு வயதானவர்களின் விருப்பத்தைவிட முக்கியமானது என்று நீதிமன்றம் தனது தீர்ப்புக்கான காரணமாகத் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்