இறுதி தீர்மானம் எதிர்வரும் 30 ம் திகதி…!
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபையினால், மின்சார பட்டியல் குறைப்பு தொடர்பாக ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக எதிர்வரும் 30ம் திகதி வெள்ளி கிழமை இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படிவீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் 30 அலகுகள் வரையிலான மின் கட்டணத்தை 23 வீதமாகவும் உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை 29 முதல் 40 வீதமாகவும் குறைப்பதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மின்சார கட்டணம் அதிகரித்து காணப்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர். உழைக்கும் பணத்தில் பெரும் பகுதியை மின்சார பட்டியலுக்கு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமையால், ஏற்கனவே பொருளாதார சிக்கலில் தவிக்கும் மக்களுக்க இது ஒரு சுமையாக அமைந்துள்ளது.