தூவானம் மீண்டும் திரைக்கு
வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில் கலாநிதி ரதிதரன் இயக்கத்தில் ஈழத்துக்கலைஞர்களின் நடிப்பில் வெளிவந்துள்ள தூவானம் திரைப்படம் இலண்டனில் இன்று 02-07-23 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இளவாலை மக்கள் ஒன்றிய அறக்கட்டளை UK பங்களிப்புடன் குறித்த திரையிடல் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
குறித்த திரையிடலினூடாக இளவாலை மக்கள் ஒன்றியத்தின் அறக்கட்டளையினால் (Uk) மறைந்த Dr Mohan அவர்களின் ஞாபகார்த்தமாக மிகப்பெரிய அளவில் அமைய பெற்றுக் கொண்டிருக்கும் உள்ளக விளையாட்டு அரங்கின் கட்டுமான பணிக்கு நிதி சேகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த இந்த உள்ளக விளையாட்டரங்கு யாழ் மாவட்டத்திலுள்ள உள்ள சகல மக்களால் மிகவும் பபயனடையக்கூடியதாக இருக்கும் எனவும் அறக்கட்டளை மேலும் குறிப்பிட்டுள்ளது.