மழையுடனான வானிலை…!
நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
இதேவேளை கண்டி நுவரெலியா சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் 100mm கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் மேல் மாகாணத்தின் சில இடங்களிலும் காலி , மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களில் 75mm க்கும் அதிக பெய்யலாம் என்றும்
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யலாம் என்றும் காற்று அடிக்கடி பலமாக வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் தருணங்களில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.