சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு..!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ நிறுவனம் எரிவாயுவின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு பின்வருமாறு அமைந்துள்ளது.
12.5 kg – 204 ரூபாவால் குறைப்பு (புதிய விலை ரூ . 2982)
5kg – 83 ரூபாவால் குறைப்பு (புதிய விலை ரூ .1198)
2.3kg – 37 ரூபாவால் குறைப்பு (புதிய விலை ரூ.561
என்ற ரீதியில் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகலாவிய ரீதியில் விலை குறைவடைந்தமையாலும் ,அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரித்ததமை உள்ளிட்ட காரணங்களாலயே எரிவாயுவின விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விலை குறைப்பானது மக்களை ஓரளவு மகிழ்ச்சிபடுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *