கோயம்புத்தூரில் கோரவிபத்து…!
இந்தியா கோயம்புத்தூர் தனியார்(ஶ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி) பல்கலைகழகமொன்றின் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்துள்ளது.
கல்லூரியில் ஏற்கனவே இருந்த சிறிய பக்கவாட்டுச் சுவரை ஒட்டி புதிதாக 10 அடி உயரம் கொண்ட பக்கவாட்டு சுவர் கட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது இதன்போது திடீரென பழைய சுவர், தொழிலாளர்களின் மீது இடிந்து விழுந்துள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் மேற்கு வங்காளம் மற்றும் கோவையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.