2023உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!
க.பொ.த உயர்தரப்பரீட்சையை இவ்வாண்டு இறுதியிலும் சாதாரணதரப்பரீட்சையை எதிர்வரும் முதல் காலாண்டு பகுதியிலும் நடத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
2020_2021 ஆம் ஆண்டுகளில் கொரோணா தொற்றின் காரணமாக 50-60 வீதமான பாடசாலைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. கற்பித்தல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது .தற்போது உயர்தரபரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் .
இது நிறைவடைந்த பின் சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் மற்றும் அடுத்தவருடம் முதல் ,முதல் காலாண்டு பகுதியில் சாதாரணதரப்பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை 2023ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் தோற்றுவதற்கு இன்று முதல் (07.07.2023)எதிர்வரும் 28ம் திகதிவரை ஒன்லைனில் விண்ணபிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.