வெளிநாடு செல்லும் மக்கள்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பினை தேடி செல்லும் இளைஞர் யுவதிகள் ஒவ்வொருவருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் 300,000 இலங்கையர் இவ்வருடம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என எதிர்ப்பார்ககப் படுகிறது.இந்த ஆண்டு முற்பகுதியில் இதுவரை கணக்கெடுக்கப்பட்ட கணீப்பீட்டின் படி 150,000 மக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு சென்று இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 311,000 இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா ,குவைட் ,கட்டார் ,ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு அதிகளவில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மக்கள் பொருளாதார சிக்களுக்கு முகம் கொடுத்தமையால் தான் அதிகளவான மக்கள் வெளிநாடு செல்ல வேண்டி ஏற்பட்டமையும் குறிப்பிட தக்கது.