தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு..!
அங்குருவத்த பிரதேசத்தில் காணமல் போன 24வயது தாயும் அவரது 11 மாத குழந்தையும் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணின் கணவர் காலையில் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி ,அன்று மாலை 6.30மணியளவில் பணி முடித்து வீடு திரும்பிய போது தனது மனைவியையும் ,குழந்தையையும் காணமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் அக்கம் பக்கத்தவரிடம் கூறி இருக்கிறார்.
பெண்ணின் பெற்றோரிடமும் விசாரித்த நிலையில் அங்கும் வரவில்லை என்று கூறி இருக்கின்றனர்.
இதனையடுத்து பொலிஸ்மோப்ப நாய்களுடன் தேடும் பணி ஆரம்பமாகியிருந்தது.
இதனிடையே காணாமல் போன பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவரின் முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தி பொலிஸ்காவலில் விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தான் தாயும் மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.