மொணராகலை மாவட்டத்தில் நில அதிர்வு பதிவு..!
மொணராகலை மாவட்டத்தில்2.6 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இன்று காலை இவ் நில நடுக்கம் பதிவு செய்யப்பட்டதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதே வேளை இந்நில அதிர்வு தொடர்பாக சேத விபரங்கள் பதிவாக வில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை அண்மையில் இலங்கைக்கு தென்மேற்கே 1200கி.மீ க்கு அப்பால் இலங்கை இந்திய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இவ் நில நடுக்கம் கொழும்பு ,பத்தரமுல்லை,அக்குரெஸ்ஸ,காலி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
இவ் நிலநடுக்கமானது 5.8 மெக்னியூட் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் தான் இன்றைய தினமும் மொணராகலை மாவட்டத்தில் நில அதிவு பதிவாகியுள்ளமை குறிப்பிட தக்கது.