இந்தோனேசியாவில் நிலநடுக்கம் பதிவு..!

இன்றைய தினம் இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது கிழக்கு போலாங் மோங்கோண்டோ ரீஜென்சிக்கு தென் கிழக்கே 128 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *