உக்ரைன் ரஷ்ய போரும் உணவும்..!
உலகில் மீண்டும் உணவு பொருட்களின் விலை உயர்வு பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போரின் காரணமாக இந்நிலைமை தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரைனில் இருக்கிற பல முக்கிய துறைமுகங்களை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை
உக்ரைனின் ஒடேசாவில் உள்ள சீன துணைத் தூதரகமும் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உக்ரைனின் தானியக் கப்பல்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில் உலகில் உணவு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட வாய்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வளர்ந்து வரும் நாடுகள் பெருமளவில் பொருளாதார சிக்கலை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.