சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக லஹிரு திரிமானே தெரிவிப்பு..!
சர்வதேச கிரிக்கெட் போட்களில் இருந்து ஓய்வு பெற போவதாக லஹிரு திரிமானே தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் குழாமில் மிக சிறப்பாக விளையாடி ,பல ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு சிறந்த வீரர்.2010ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக களமிரங்கினார்.இது அவரது ஆரம்ப போட்டியாகவும் சர்வதேச அரங்கில் பயணப்பட்டார். அதே வேளை 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர் போட்டியில் இருதியாக விளையாடினார். இந் நிலையில் தான் இவர் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
இவர் 3164 ஓட்டங்களை 127 ஒரு நாள போட்டியில் பங்கு கொண்டு பெற்றுள்ளார்.இதே வேளை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2088 ஓட்டங்களை எடுத்துள்ளார்.இதே வேளை இருபதுக்கு இருபது போட்டிகளில் 26போட்டிகளில் பங்கு கொண்டு 291ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இதே வேளை இலங்கை அணிக்காக விளையாடியது மிகப்பெருமையான விடயம்.கிரிக்கெட் நிறைய விடயங்களை எனக்கு தந்திருக்கிறது.என்னுடன் பயணித்த ரசிகர்களுக்கும்,கிரிகெட் வாரிய நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.