மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
ஒவ்வொரு நாளும் வாகன விபத்துக்கள் பதிவாகிய வண்ணம் தான் இருக்கிறது. குறைந்த பாடு தான் இல்லை.
மொனராகலை தம்பகல்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயதான இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இவ் இருவரும் உயிரிழந்துளள்ளனர்.
தம்பகல்ல பிரதேசத்தை சேர்ந்த தருச சந்தீப மற்றும் ருவன் வெள்ள பிரதேசத்தை சேர்ந்த சஸ்மித எஷான் ரணவீர என்ற இரு பாடசாலை மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.