போலி விசாவுடன் பெண் கைது…!
குற்றப் பிரிவின் அதிகாரிகளால் போலி விசாவுடன் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன, குறித்த பெண் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக
விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் குற்றப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணும்.பெண்ணுக்கு போலி விசாவினை பெற்றுக் கொடுத்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீர் கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் , குறித்த பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும்,குடிவரவு ,குடியகழ்வு அதிகாரிக்கு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.