தற்கொலை தாக்குதலில் பலர் உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 54க்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் பஜூர்கர் நகரில் இடம் பெற்ற ஒரு கட்சியின் மாநாட்டிலேயே தற்கொலை குண்டுதாக்குதல் நடாதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந் மாநாட்டில் சுமார் 500க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றதாக தெரிவிக.கப.படுகிறது.
இத்தாக்குதல் சம்பவத்தில் 40 பேர் உடல் சிதறி சம்மவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் 100ற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்கொலை தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இத்தாக்குதலில் உயிரிழந.தவர்களுக்கு பகிஸ்தானின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி,முன்னால் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.இத்தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.