பிளாஸ்டிக் பாவனைக்கு தடை..!
பிளாஸ்டிக்கோடு போராடி வெற்றிப்பெறுவது என்பது மிகவும் கடினமான செயலாக காணப்படுகிறது.எவ்வளவு தான் மக்களிடம் பிளாஸ்டிக்கை பற்றி எடுத்து சொன்னாலும் அதைப்பற்றி மக்கள் காதுகளில் வாங்கி கொள்வதில்லை.
இந்நிலையில் ,இலங்கையில் ஒக்டோபர் மாதம் சில குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) இன்று அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான ஸ்ட்ராவ் வகைகள், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், சரமாரி தட்டுகள், மாலைகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாவனையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உரிய முறையில் பிளாஸ்டிக் உபகரணங்களை போடாமல் கண்ட கண்ட இடங்களில் போடுவதால் விலங்குகள் அதனை உட்கொள்கின்றன. இதனால் விலங்குகள் மரணமடைகின்றன.மண் வளம் பாதிப்படைகிறது. இவை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.