ஜப்பானின் நிலவு பயணம் ஒத்திவைப்பு..!
நிலவை சுற்றி பல நாடுகள் வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு நாடாக தற்போது ஜப்பானும் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை சந்திரனுக்கு ஏவப்படவிருந்த விண்கலம் திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் அமைந்துள்ள தனேகஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து H.2.A ரொக்கட் ஏவப்பட இருந்தது.எனினும் சாதகமற்ற வானிலை காரணமாக இறுதியில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
ஜப்பானின் விண்வெளி நிலையமான தனேகஷிமா நிலையத்தால இந்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
இது நிலவில் தரையிறங்கினால் நிலவில் கால் பதிக்கும் 5வது நாடாக ஜப்பான் திகழும்.
இச்செயற்திட்டத்தின் மூலம பெறப்படும் தகவல்கள் அமெரிக்க தலைமையிலான ஆர்டெமிஸ் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலம் நிலவிற்கு வீரர்களை அனுப்புவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.
இதே வேளை இந்தியாவின் சந்திரயான் -03 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி தனது பணியை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.