மழை – எழுதுவது கவிஞர் கேலோமி
போற்றி
பாதுகாக்கப்படவேண்டிய
இயற்கையின்
உயிர்
கொடை.
வேண்டிய
நேரத்தில்
தக்கவைக்க
இயலவில்லை.
ஆற்றை
குளம்
குட்டை
ஏரி
புறம்போக்கு
கிராமம்
நகரம்
என்று
ஆக்கிரமித்து
பெரும்
கட்டடங்களை
கட்டி
மழைநீர்
வடிவதற்கு
இடம்
கொடாமல்
ஆறுகளை
நதிகளை
சுருக்கி
விற்று
வயிறு
வளர்க்கும்
அரசியல்
வியாபாரிகள்
உள்ளவரை
மழை
இந்த
உலகில்
என்றும்
நல்ல
பெயர்
வாங்கப்போவதில்லை.
மழை
வந்தாலும்
வராவிட்டாலும்
நன்றியில்லாத
மனிதர்கள்
நாவில்
அது
பழி
சுமக்க
பிறந்த
உயிர்.
மழை
நமது
ஆதி
வர்த்தமானம்
மட்டுமல்ல
உயிரின்
உணவின்
மீதி
வர்த்தமானமும்
அது
தான்.
நீரை
நன்றியுடன்
அருந்து.
அது
அரு
மருந்து.
விருந்து
வயிறு
மறுத்தாலும்
நா
தாகத்துக்கு
ஏங்கட்டும்.
தவித்த
வாய்க்கு
தண்ணீர்
தராதவன்
மனிதனில்லை.
பகைவன்
என்றாலும்
தண்ணீரை
மட்டும்
இல்லை
என்று
சொல்லாதே!
இயற்கை
உன்
மேல்
உயிர்வாழிகள்
மேல்
கருணை
பாராட்டும்
அளவை
மழை.
ஆழி
மழை
கண்ணா!
ஆண்டாள்
பாசுரம்
காதில்
ஒலிக்க
மின்னல்
ஒளிக்க
வானவில்
சரம்
தொடுக்க
மண்
மணக்க
இடி
முழக்க
மரங்கள்
காற்று
குளிர்விக்க
வானத்தின்
சங்கமத்தில்
பஞ்சபூதங்களுடன்
இறைவன்
ஆற்றும்
வேளை
இங்கு
லேசுபட்ட
காரியம்
அல்ல.
தமிழகத்திற்கு
தண்ணீர்
வழங்கும்
காவிரி
வள
நாட்டான்.
மேட்டூர் அணையில் இருந்து!
*கேலோமி🌹🌹🌹🌹🌹