சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவு..!
சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதிவிக்காலம் எதிர் வரும் 13 ம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில தர்மன் சண்முகரத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 70 .4 சத வீத வாக்குகள் கிடைகப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் வெற்றியீட்டியதையடுத்து நரேந்திர மோடி,அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் சிங்கப்பூருக்கான உக்ரைன் நாட்டு தூதர் கட்டேரினா ஜெலங்கோ உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியில் மூத்த அமைச்சர், துணை பிரதமர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை தர்மன் சண்முகரத்னம் வகித்துள்ளார். அவர் 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.தர்மன் சண்முகரத்னத்தின் தந்தை சண்முகரத்னம், பிரபல மருத்துவ விஞ்ஞானி. ‘சிங்கப்பூர் நோயியல் துறையின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.தர்மன் சண்முகரத்னத்தின் மனைவி ஜேன் யுமிக்கோ இட்டோகி சட்டத்தரணியாவார். ஜப்பான்-சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு மாயா என்ற மகளும், அகிலன், அறன், அறிவன் என்ற 3 மகன்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.