கப்பல் ஓட்டிய தமிழன் ஒரு பார்வை…!

வா ஊ .சிதம்பரம் பிள்ளை

வா ஊ சிதம்பரம் பிள்ளை பற்றி நாம் அறிந்திருப்போம் முதல் முதலில் கப்பலோட்டிய மாலுமி என்ற வாசகத்தை தன் வசம் வைத்திருப்பவர்.இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.இதில் மிக முக்கிய மான அம்சம் தான் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் அன்றைய காலத்திலே கப்பல் போக்குவரத்தில் ஈடுப்பட்டிருக்கின்றார்.

இவர் இந்தியாவின் ஒட்டப்பிடாரத்தில் 05.09.1872 ல் பிறந்தார்.இவர் சிறந்த வக்கிலாக திகழ்ந்ததோடு அரசியலிலும் தனது செல்வாக்கை செலுத்தி வந்தார்.

இவரது தந்தையும் ஒரு வழக்கறிஞ்சராக இருந்தார். வா.ஊ சியும் எதிர் காலத்தில் ஒரு வலக்கறிஞ்ஞராக ஆவதற்கு முன்னோடியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.சிறுவயதில் ஒட்டப் பிடாரத்திலும்,திருநல்வேலியிலும் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதன் பிறகு அரச நிர்வாக வேளைகளில் ஈடுப்பட்டார். எனினும் அதில் நீண்ட காலம் பணி புரிய வில்லை .அதிலிருந்து விலகி சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டப்படிப்பை மேற்கொண்டு வழக்கறிஞர் ஆனார்.இதில் விசேட அம்சமாக கருதப்படுவது ஏழை மக்களுக்காக வாதாடி வந்தமையே ஆகும்.

ஆங்கில அரசுக்கு எதிராக இவர் செயற்பட்டதால் 1908 ம் ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார்.அவரது விடுதலை செய்யக்கோறி இந்தியர்களின் ஆதரவும் ,ஊடகங்களின் ஆதரவும் கிடைத்தது எனினும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.இவர் சிறையில் இருந்த காலத்தில் மிகவும் கடிமாக வேலை செய்தார் இதன் காரமாக இவரது உடல் பலவீனமடைந்தமை குறிப்பிடத்தக்கது.இதன்காரமாக இவர் 1012.12.12விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வந்த பின் அவருக்கான ஆதரவு குறைந்திருந்தது மக்கள் மத்தியில்.அதன் பிறகு ஏழ்மை நிலையை அடைந்தார். அதனால் அவரது மனைவியுடனும் பிள்ளையுடனும் சென்னையில் குடியேறி வாழ்ந்தார் .

அதன் நலன் புரி அமைப்புகளில் இணைந்து தனது செயற்பட்டார் .மற்றும் இலக்கிய படைப்புகள் வெளியிடுவதிலும் ஈடுப்பட்டார்.மிக முக்கியமா திருக்குறள் ,தொல்காப்பியம் ஆகிய நூல்களின் தொகுப்புகளையும் ஆஙகில நூல்களின் தமிழ் பெயர்ப்பிணையும் வெளியிட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து இந்திய பாரம்பரிய கைத்தொழிலை பாதுகாக்க அரும்பாடுப்பட்டார்.இதே வேளை இந்திய சுதந்திரம் அடைவதற்காக பல திட்டங்களை மேற்கொண்டார்.இவர் சிறந்த நடவடிக்கையாக பார்க்கப்படுவது சுதேச ஸ்டிம் நேவிகேஷன் நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.அதன பிறகு இரண்டு நீராவி கப்பல்களை வாங்கி தூத்துக்குடி கொழும்புகளுக்கிடையில் பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பல சேவைகளை வழங்கிய மிக உன்னதமான மனிதர் 1936.11.18 அன்று இவ்வுலகை விட்டு நீங்கினார்.

உயிர் பிரிந்தாலும் அவரதது அர்ப்பணிப்புகள் இன்றும் உலகில் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றன.இவரது பெயரால் தூத்துக்குடி துறைமுகம் வா ஊ போர்ட் என்றும் மாற்றப்பட்டமை விசேட அம்சமாகும்.பாடசாலை,பூங்கா என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இவரது நினைவாக முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதே வேளை இவரது வாழ்க்கை வரலாற்றை கூறும் படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிவாஜி கணேசன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாம் வாழ்வது சிறிது காலம் தான் அதை பயன்மிக்க தாக வாழ்ந்தால் அனைவருக்கும் உதவும்.

எழுதுபவர் -ஆர்.ஜே உமாதேவி

இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *