இந்தியா பெயர் மாற்றப்படுமா..?
பல நாடுகள் தங்களது பெயரினை மாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவை பாரதம் என பெயரினை மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நியூயோர்க்கில ஜி -20 நாடுகளின் உச்சி மா நாடு நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் ஜனாதிபதி மாளிகையில் விருந்துபசாரம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான அழைப்பிதழ்களை அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து இந்தியாவின் பெயரை மாற்ற பல திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக பலரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஐ.நா பொது செயலாளரிடம் செய்தியாளர் ஒருவர் இந்தியா என்ற பெயரை மாற்றி பாரதம் என்று மாற்றினால் ஐ.நா ஏற்குமா என கேட்டார்.இதன் போது தகவல் வெளியிட்ட ஐ. நா பொது செயலாளர் கடந்த ஆண்டு துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என அந்நாட்டின் அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்தோம்.அது போல் இந்தியாவின் பெயரினை மாற்ற கோரிக்கை வந்தால் பரீசீலனை செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.