ஜோசிமாத் : கீழ்நோக்கிப் புதைந்துகொண்டிருக்கும் இந்திய ஆன்மீகச் சுற்றுலா நகரம்.

ஹிமாலயப் பிராந்தியத்திலிருக்கும் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமான நகரமான ஜோசிமாத் சில வாரங்களாக வேறொரு காரணத்துக்காகவும், சர்வதேச ஊடகங்களில் சரமாரியாக அடிபட்டு வருகிறது. அதன் காரணம் காலநிலை மாற்றம், நிலச்சரிவு போன்றவையாகும். கடந்த சில ஆண்டுகளாகவே நகரின் பல பகுதிகளில் கவனிக்கப்பட்டு வந்த நில வெடிப்புகள், கட்டடச் சரிவுகள் அதிகமாகி  நகரத்தின் பல பகுதிகள் புதைந்துகொண்டிருப்பது அப்பட்டமாகத் தெரியத் தொடங்கியிருப்பதால் மக்கள் கலவரமடைந்து போயிருக்கிறார்கள்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 மீற்றர் உயரத்திலிருக்கிறது ஜோசிமித் நகரம். தமது வீடுகள், வீதிகளில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள், வெடிப்புகள் அதிகமாவதைக் கண்டு கலவரமாகியிருக்கும் மக்கள் அதிகாரிகளிடம் நீண்ட காலமகவே  புகார் செய்து வந்திருக்கிறார்கள். சமீபகாலத்தில் அவை தீவிரமாகியிருப்பதால் நகரின் சில பகுதிகள் விரைவில் இடிந்து விழலாம், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கலாம் என்ற பயத்தில் கட்டடங்கள் சிலவற்றை இடித்துவிட அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். 

ஹோட்டல்கள், விளையாட்டு அரங்கம், மின்சாரம் தயாரிப்பு மையம், பல்கலைக்கழகம் போன்ற நூற்றுக்கும் அதிகமான கட்டடங்கள் எச்சமயத்திலும் இடிந்து விழலாம் என்பதால் நகரின் குறிப்பிட்ட பகுதிகள், “எவரும் நுழைய அனுமதியற்ற பாகங்கள்,” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 20,000 மக்கள் தொகையுள்ள நகரிலிருந்து பல நூறுபேரைப் பாதுகாப்புக் கருதி அதிகாரிகள் வேறிடங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள்.

தமது வீடுகள், நகரக் கட்டடங்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து பலர் நகரில் குரல்கொடுக்கிறார்கள், எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தாம் இழக்கும் பொருளாதார மதிப்பு, வருமானம் ஆகியவற்றுக்கேற்ப அரசு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று அவர்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *