பொருளாதார வளர்ச்சியில் மிளிரும் இந்தியாவில், நாட்களைப் பசியுடன் கழிப்பவர்கள் நிலைமை மோசமடைகிறது.

உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அடிகளை வாங்கிக்கொண்டு இருக்கும் சமயத்தில் கணிசமான அளவில் வளரும் பொருளாதாரமாகத் திகழ்கிறது இந்தியா. அதே சமயம் பசியால் பாதிக்கப்பட்டு குறைவான வளர்ச்சியை எதிர்கொள்வதைக் கணிக்கும்  Global Hunger Index இல் இந்தியாவின் இடம் மேலும் மோசமாகியிருக்கிறது. 121 நாடுகளில் நடத்தப்பட்ட அக்கணிப்பீட்டில் இந்தியா 107 இடத்தைப் பெற்றிருக்கிறது. கடந்த வருடம் 101 வது இடத்திலிருந்த இந்தியா இவ்வருடம் மேலும் சறுக்கியிருக்கிறது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குறைவான பிள்ளைகள் அதிகமாகி வருகிறார்கள். அவற்றில் இந்தியக் குழந்தைகளின்  நிலைமையானது கடந்த மூன்று வருடங்களாக இறங்கு நிலையிலேயே இருக்கிறது. 2020 இல் இந்தியா 94 வது இடத்தில் இருந்தது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியா,  தனது பக்கத்து நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், சிறீலங்கா ஆகியோரைவிட அவ்விடயத்தில் மோசமாகிக்கொண்டே இருப்பதையே Global Hunger Index,  சுட்டிக் காட்டுகிறது. 

ஜெர்மனியைச் சேர்ந்த Welthungerhilfe, அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து உலக நாடுகளில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடுவதன் மூலம் கணிக்கின்றன. தேவையான சத்துகளுள்ள உணவின்றிக் குழந்தைகளின் உயரம், பருமன் ஆகியவை அந்தந்த வயதுக்கு ஏற்ற அளவில் வளர்ச்சியடையாததை வைத்து நிர்ணயிக்கப்படுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *