சீதை இருந்த இடம்..!

நுவரெலியா

இலங்கை தீவின் மிக அழகான நகரங்களில ஒன்றாக திகழும் ஒரு நகரம் நுவரெலியா.நுவர எலிய என்பதன் பொருள் ஒளி மயமான நகரம் என்பதாகும் .சிங்களத்தில் நுவர என்ற சொல் நகரத்தினையும்,எலிய என்பது ஒளியையும் குறிக்கும்.

நுவரெலிய நகரமானது இயற்கை சூழலால் சூழப்பட்டிருக்கிறது. இங்கு பச்சை படர்ந்த காடுகளும்,தேயிலை செடிகளும் அதிகளவு காணப்படுகிறது.

இங்கு வாழும் பெரும்பாண்மையான மக்கள் தமிழர்களாவர்.இவர்கள் தேயிலை தொழிலினை மேற்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதாரத்தின முது கெழும்பாக திகழக்கூடியவர்கள் இவர்களாவர்.ஆனால் மிக வரிய கோட்டின் கீழ் இருப்பவர்களும் இவர்கள தான். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தேயிலை பயிறானது ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இது அதிகளவு ஏற்றுமதி செய்யும் ஒரு நகரமாக நுவரெலியா திகழ்கிறது.

மற்றும் இந்நகரத்தில் பல சுற்றுலா தளங்கள் காணப்படுகின்றன. விக்டோரி பூந்தோட்டம்,சீதையை இராவணன், சிறை வைத்த இடமான சீதை அம்மன் ஆலயம்,அசோகவனம்,குதிரை பந்தய திடல்,என்பனவும் பல நீர்வீழ்ச்சிகளையும் தன்னகத்தே கொண்டு மிக சிறப்பாக மிளிர்கிறது.

வசந்த காலத்தில் நுவரெலியா மிக அழகாக காட்சி தரும் .ஏன் எனில் விதவிதமான பூக்கள் பூத்து குழுங்கும் இக்காலப்பகுதியில் தான்.அதிகளவு மழை பெரும் மாவட்டமாகவும்,குளிர் அதிகமாக இருக்கும் மாவட்டமாகவும் நுவரெலியா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள் நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாகவும் நுவரெலியா திகழ்கின்றது.

நேரம் கிடைத்தால் இலங்கையின் நுவரெலியாவினை பார்வையிட நீங்களும் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *