விநாயக சதுர்த்தி..!
இன்றைய தினம் உலகளாவிய ரீயில் அனைத்து இந்து மக்களாலும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் என்றாலே அனைவருக்கும் மிக விருப்பமான கடவுள். விநாயகனை வழிப்பட விக்கினங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அதாவது நமது வாழ்க்கையில் சில விடயங்கள் நடைப்பெற தடைகள் ஏற்படும். இவ்வாறான நடைகளை சந்திப்பவர்கள் விநாயகனை வழிப்பட்டால நற்காரியங்கள் தடையின்றி சுகமாய் நிகழும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் இலங்கை,இந்தியா,நேபாளம்,மலேசியா,சிங்கபூர் என பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது.
எந்த காரியத்தை முதலில் செய்ய ஆரம்பிக்கும் போதும் விநாயக வழிப்பாடனது முதன்மை பெறுகிறது. அதற்கு அடுத்தப்படியாகவே மற்ற மற்ற நிகழுவுகள் நடைப்பெறும்.
விநாயகருக்கு மோதகம் மிக பிடித்தமான ஒரு உணவாகும் ,இதே வேளை அவல்,பொங்கல்,கடலை,பழங்கள் என பல பிரசாதங்களை விநாயகருக்கு படைத்து வழிப்படுகின்றனர்.
நகரப்பகுதிகளிலும் கிராம பகுதிகளிலும் இந்த விநாயக சதுர்த்தியானது மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.