கண்டு பிடிக்கப்பட்ட காதலி..!
அருகில் இருக்கும்போது ஆண் என் பெயரெடுத்து விடுகிறாய்
அப்போது நீ சூரியனாம்
இல்லையில்லை என்று பட்டிமன்றத்தில் மறுப்பது போல் வாதங்களை அடுக்குகின்றேன்
ஏனென்றால் என்னைப்பார்த்து கண்சிமிட்டி சிரிக்கும் கன்னி நீ…!
இல்லையில்லை கள்ளி நீ..!
நீலஉடை சிலநேரம்
சிவப்புடை சில நேரம்
அடிக்கடி உடைமாற்றிக்கொள்கிறாய்..!
கொஞ்சக்கொஞ்ச நேரத்தில் கொஞ்சுவதற்குள் இடம் மாறிப்போகிறாய்..!
கன்னியர்க் கூட்டத்தில் காணாமல் போனாலும்
உன்னிப்பாய் உனைக்கண்டெடுப்பேன்
ஏனெனில் காதலி நீதான் நட்சத்திரமே…!
பசுமைத்தமிழன்
தகடூர் சு தமிழரசன்
தருமபுரி