சென்னையில் இருந்து கடந்து சென்றது ‘மிக்ஜம்’
மிக்ஜம் புயல் நேற்று காலை வட கிழக்கே 110 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
இது இன்றைய தினம் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் ,மசூலிப்பட்டணத்துக்கு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதே வேளை மிக்ஜம் புயல் தாக்கத்தினால் சென்னை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.தீவிரமான காற்று ,கடுமழையினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வெள்ளம் நிரம்பியதால் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதே வேளை தற்போது மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து மெதுவாக நகர்ந்து செல்வதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 130 கி.மீ வடக்கு திசையில் விலகி மிக்ஜம் புயல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை இப்புயலானது நாளை காலை 5 மணி அளவில் ஆந்திராவின் பாபட்லா அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.