ரஷ்ய ஜனாதிபதி சவுதி அரேபிய பட்டத்து இளவரசரை சந்திக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்றைய தினம் ஐக்கிய அரபு அமீரகம்,சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன் போது சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை சந்திக்கவுள்ளார். தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முஹமது பின் சயத் அல் நஹ்யணையும் சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்புகளில் இஸ்ரேல் பாலஸ்தீன போர்,கச்சா எண்ணெய் சந்தை,இரு நாட்டு உறவு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளன.
இதே வேளை ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை ரஷ்யாவிற்கு செல்ல இருக்கின்றார் .இதன் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்திக்க உள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்புக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.