ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்…!
அன்னையும் நீயே அகிலமும் நீயே.
எல்லோரும் ஆலயம்
போனார்கள்
சிலர் கோயிலுக்குப்
போனார்கள்
பலர் மசூதிக்குப்
போனார்கள்
ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்..!
ஆம் கடவுள் என்ற அம்மா அங்கே
இருக்கிறாள்
ரிஷிகள் இமய மலைக்குப்
போனார்கள்
சித்தர்கள் குகைகளுக்கு
போனார்கள்
சாமியார்கள் காசிக்கு
போனார்கள்
முனிவர்கள் காட்டுக்குப்
போனார்கள்
ஆனால் நானோ அடுப்படிக்கு போகிறேன்…!
ஆம் கடவுள் என்ற அம்மா அங்கே
இருக்கிறாள்
நிம்மதி தேடி
நிர்மல்யம் நாடி
நித்திரை வேண்டி
நிரந்தரம் காண நிலையில்லாத உலகில் எங்கெங்கோ அலைகிறார்கள்….!
சமையலறையில்-
அம்மா உன் பாதங்களில்
காண்கிறேன் அந்த
சந்நிதியை…
உழைப்பின் மேன்மைக்கு எத்தனையோ உதாரணங்கள் சொன்னார்கள் நான்
உன்னைக் காட்டுகிறேனே அம்மா….!
படைத்தவன்
பிரம்மா எனில்
பாடு பொருள் உயிர்
உற்பத்தி மென்மையின்
இலக்கணமே நீயும்
கூட கடவுளின் அவதாரமான பிரம்மா தானோ?
உஷா வரதராஜன்.