போரும் மனிதனும்..!

போர்த்தொழில்


போர்த்தொழில் பழகு
என மகாகவி சொன்ன போது
இந்தியா
வெள்ளையர்களுக்கு
அடிமை தேசம் …

இந்த உலகமெங்கும் யார் ?
யாருகோ
அடிமைப் பட்டுக்குக்
கிடந்த போது ,
கிடக்கும் போது அது சரிதான் !

அதே போல …
உள் நாட்டிலேயும் – அது
சட்ட ரீதியாகவோ ,
ஜாதி ரீதியாகவோ ,
மத ரீதியாகவோ
அடிமைப்
பட்டுக்கிடக்கும் போது
போராட்டங்கள்
அவசியம் தான் …

ஆனால்
பகுத்தறிவு தான் எதற்காக
எதையும் யோசித்து ,
பேசித் தீர்த்துக்
கொள்ளலாமே தவிர
இன்றைய காலத்தில்
எந்தவொரு உயிருக்கும்
சேதாரம் இல்லாமல்
செயல் படுவதே
ஒரு நாட்டின் அமைதிக்கும் ,
உலக அமைதிக்குமான
வழி …

இதுவே மனிதர்கள்
என்று சொல்லிக் கொள்கிற
நமக்கான
உண்மைத் தகுதி …

அதுவரை
விஞ்ஞானம் சந்திரனைத்
தொட்டென்ன , சூரியனைத்
தொட்டென்ன … மனிதன்
இன்னும் மனிதனாக
மலரவில்லை என்றே
அர்த்தம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *