இந்திய பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரின் கூட்டுப்பயிற்ச்சியை சீனாவானது எதிர்த்துள்ளது..!
தென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவம் கூட்டுப்பயிற்ச்சி மேற்கொண்டுவருகிறது.
இதற்கு சீனாவனது தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக சீன இராணுவத்தின் ஊடக பேச்சாளர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது “இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துளைப்பு 3 ம் தரப்பின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதை சீனா வலியுறுத்துகின்றது.சீனாவிற்கும் பிலிபபைனஸ்ற்கும் இடையிலான கடற்சார் பிரச்சினை இரு நாடுகளுக்கும் உடையது.இதில் தலையிட 3ம் தரப்பினர்க்கு உரிமை இல்லை.சீனாவானது தனது இறையாண்மை,பாதுகாப்பு,கடல் உரிமைகள் போன்றவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்”.
பிலிப்பைன்ஸ் ஆனது பிற நாடுகளுடனான தொடர்பை மேம்படுத்துவதில் சீனாவானது அதிர்ப்தியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.