இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தாக்குதல் நடாத்தி வருகிறது.
இந்நிலையில் மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு சில அமைப்புகள் ஆதரவு வழங்கி வருகின்றன.
இதன் அடிப்படையில் லெபனானை தலைமையிடமாக கொண்டு விளங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தொடுத்து வருகின்றனர்.
இதே வேளை ஹிஸ்புல்லா அமைப்பினர்க்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அடிக்கடி மோதல் இடம் பெற்று வருகிறது.இதன் படி இஸ்ரேலின் தாக்குதல்களில் லெபனானை சேர்ந்த 175 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில் 3 பத்திரிகையாளர்களும் உள்ளடங்குவார்கள்.
இவ்வாறன நிலையில் இஸ்ரேலானது லெபனானின் பெய்ரூட்டில் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன் போது ஹமாஸ் போராளிகளின் துணை தலைவர் சலே அல் அரூரியம் மற்றும் அவரது பாதுகாவலர்களும் உயிரிழந்துள்ளனர்.இதன் போது மேலும் பல பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது 60ற்கு அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதுடன்.ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் உயிரிழந்தமைக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.