உரிமைகளை தேடுவது எங்கே..!
மனித உரிமை தினம் இன்று….
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️*மனித உரிமை தின* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
இன்றைய
ஏழைகளுக்கு
“உடைமைகளை “
தேடுவதிலேயே
வாழ்க்கை தொலைகிறது…
மனித “உரிமைகளை”
தேடுவது எங்கே….?
மனித உரிமைகள்
மனிதனுக்கு ஆடையானது..
உயிர் இன்றி வாழ்ந்தால்
நடமாடாத பிணம்….
உரிமை இன்றி
வாழ்ந்தால் நடமாடும் பிணம்…
விலங்கிலிருந்து
மனிதனைப் பிரிப்பது
ஆறாவது அறிவு மட்டுமல்ல “அடிப்படை உரிமைகளும்” தான்….
யாருக்கு எப்படியோ !
ஆனால்
ஏழைகளுக்கான
உரிமை இன்னும்
“சட்ட புத்தகத்தில்” மட்டுமே
இருக்கிறது……!!
ஏழைகளின்
வீட்டு வாசலுக்கு
வரவே இல்லை…..!!.
ஆங்கிலேயர்களின்
காலத்தில்
உரிமைகள் இருந்தது
சுதந்திரம் இல்லை….
இன்றைக்கு
சுதந்திரம் இருக்கிறது
உரிமைகள் தான் இல்லை…..
எனது தேசத்தில்
பேச்சுரிமை கொடுத்தார்கள்
நாக்கை
அறுத்துவிட்டார்கள்…..
எழுத்துரிமை கொடுத்தார்கள்
எழுதுகோலை
பிடுங்கிக்கொண்டார்கள்……
சொத்துரிமையை
இருக்கிறது
சொத்து சேர்க்கும்
வழியை அடைத்து விட்டார்கள்…
கல்வி கற்கும்
உரிமை இருக்கிறது
ஆனால்
அதைக் காசு கொடுத்து
வாங்கும் சக்திதான் இல்லை…
வாக்களிக்கும்
உரிமை இருக்கிறது
ஆனால்
சிந்தித்து வாக்களிக்கும்
வாய்ப்பைத் தான்
பறித்துக் கொண்டார்கள்…..
சமயம் உரிமையை
கொடுத்தார்கள்
ஆனால்
சாமி கும்பிடும்
உரிமையைத் தான்
மறுத்து விட்டார்கள்…..
வாழும் உரிமையைக்
கொடுத்தார்கள்
ஆனால்
வாழ்வதற்கு தான்
எதையும் கொடுக்கவில்லை….
எங்களுக்கு
“குடியுரிமை” மட்டுமா
கொடுத்தார்கள்….?
“குடிக்கும்” உரிமையும்
சேர்த்தல்லவா
கொடுத்தார்கள்….. !!
போராடும் உரிமை
இருக்கிறது…..
ஆனால்
ஆள்கின்றவர்களுக்கு
எதிராக போராடும்
உரிமை தான் இல்லை……
மனித உரிமை மீறல்களை
தடுக்க
நிறையச் சட்டங்கள்
இருக்கின்றது…
ஆனால்
அந்த சட்டங்களையே
அதிகாரவர்க்த்தினர்
அடக்கிவைத்துள்ளனர்…
மனிதனின் உணவுகளைப் பற்றி சொன்ன அளவுக்கு
எந்தத் தொலைக்காட்சியும்
மனித உரிமைகளைப் பற்றி சொல்லவில்லையே….!!!
சினிமா நடிகையின்
கடை திறப்பு விழா
தலைப்புச் செய்தியாக
வருகிறது…
மனித உரிமை மீறல்கள்
கடைசிப்பக்கத்தில்
பெட்டிச்செய்தியாக வருகிறது….
உலகமே எதிர்த்தாலும்
உரிமைக்காக போராடுவோம்….!!!
உயிரையே இழந்தாலும்
உரிமையைப் பெறுவோம்….!!!♥ *_அனைவருக்கும் மனித உரிமை தின நல்வாழ்த்துகள்_* ♥ இவண்;
கவிதை ரசிகன் குமரேசன்
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️