அமெரிக்க,இங்கிலாந்து நாடுகளுக்கு எச்சரிக்கை..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது பல மாதங்களாக தாக்குதல் நடாத்தி வருகிறிது .
இதன் காரணமாக சிறுவர்கள்,பெண்கள்,முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு தேவையான உணவு,மின்சாரம்,நீர்,மருந்து என அனைத்து விதமான அத்தியவசிய தேவைகளையும் தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலிற்கு ஆதரவு வழங்கிவருகிறது.
பாலஸ்தீனத்திற்கு சில அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.அந்த வகையில் ஏமன் ஐ தலைமையிடமாக கொண்டு செயற்பட்டுவரும் ஹவுதி அமைப்பினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ் அமைப்பினர் செங்கடல் வழியாக இஸ்ரேலுக்கு பயணிக்கும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தி வருகிறது.
இந்நிலையில் இவ் ஹவுதி அமைப்பினர் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியன தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் போது 05 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை இந்த தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க தயாராகுங்கள் என அமெரிக்க,இங்கிலாந்து நாடுகளுக்கு ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.