நீருக்கு அடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா..!
அண்மையில் அமெரிக்கா, தென்கொரியா,ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுப்பட்டன.
இதற்கமைய தன்னாலும் முடியும் என்பதற்கிணங்க வடகொரியாவானது நீருக்கு அடியில் அணு ஆயுத சோதனையை செய்துள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில் டிரோன் மூலம் அணு ஆயுதம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியாவானது வட கொரியாவின் செயற்பாடுகளை கண்காணித்து வருகிறது.
இதே வேளை உக்ரைன் உடனான ரஷ்யாவின் போருக்கு வடகொரியாவானது ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இதற்கு பதிலாக வடகொரியாவின் செயற்கை கோளை நிறுவும் செயற்திட்டத்திற்கு ரஷ்யாவானது உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்ரம் நிலவி வருகின்றது.எனினும் அணு ஆயுத சோதனை நடவடிக்கை முன்னிட்டு மற்றைய நாடுகள் அச்சம் கொள்ள தேவையில்லை என வட கொரியா தெரிவித்துள்ளது.