3 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது ஈரான்..!
விண்வெளி துறையில் பல நாடுகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்த முனைந்து வருகின்றன.
இந்த வகையில் ஈரான் 3 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
சிமோர்க் ரொக்கெட்டின் மூலம் இந்த செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கை கோள்கள் தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழிநுட்பம் போன்ற பயன் பாட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இச்செயற்றிட்டத்திறகு அமெரிக்காவானது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஈரான் ஆனது செயற்கை கோள்கள் சோதனை நடாத்தியிருப்பது ஐ.நா பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை மீறி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதே வேளை அணு ஆயுத திறன் வாய்ந்த பொலிஸ்டிக் ஏவுகணைகள் போன்றவற்றை சோதனை செய்ய கூடாது எனவும் தெரிவித்துள்ளது.