இப்படியும் ஒரு வைத்தியரா?

கம்பளை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளை மற்றுமொரு நபருக்கு,

விநியோகிக்க முயன்றபோது வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர் வைத்தியசாலை நேரத்துக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில்,

வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருத்துவர் இரவு நேரத்தில் இரகசியமாக தனது காரில் சென்று பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பெற்று விற்பனை செய்து வந்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றைய தினம் கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *