அழகிய நிலா…!

💃💃💃💃💃💃💃💃💃💃💃 *அவள் ஒரு ரகசியம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

என்னவளே…!
பெயர் வைக்காத
பூ தான்
உன் புன்னகையோ….?

இனிப்பில்
இடம் பெறாததுதான்
உன் இதழ்களோ….?

தென்றல் உருவாகுவது
உன் முந்தாணையிலோ…?

முக்கனி உருவானது
உன் முத்தத்திலோ….?

அன்னம் நடைக்கற்றது
உன்னிடம் தானோ ?

அழகிய நிலா
ஒளி பெற்றது
உன் முகத்ததிலோ ?

சிலைகள் என்பதெல்லாம்
உன்னை
படைப்பதற்காகப் பார்த்த ஒத்திகைகளோ ?

சித்திரம் என்பதெல்லாம்
உன்னை உருவாக்க
வரைந்த மாதிரிப் படங்களோ ?

கவிதை என்பது
உன்னை வர்ணித்து எழுத
கொண்டு வந்த
ஒரு கலையோ ?

காவியம் என்பதெல்லாம்
உன்னை சிறப்பிக்க
தொடுத்த பா மாலையோ ?

புரியாத புதிர் தான்
உன் அழகின் ரகசியமோ ?
நீதான்
படைப்பின் அதிசயமோ ? *கவிதை ரசிகன்*

💃💃💃💃💃💃💃💃💃💃💃

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *