நீங்கள் மலை ஏறுபவரா?
ஹந்தானை மலை
இலங்கையின் மத்தியமலை நாட்டில் காணப்படும் மலை தொடர்களில் ஹந்தானை மலை தொடரும் ஒன்றாகும்.
இதன் அழகும், இங்கு காணப்படும் கால நிலையும் அனைத்து மக்களாலும் விரும்பப்படுகிறது.
இந்த பிரதேசத்திற்கு அடிக்கடி மலை ஏறுபவர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் பல்கலை கழக மாணவர்கள்,இதற கற்கையில் ஈடுப்படும் மாணவர்களும் இந்த மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுப்படுகின்றனர்.
இயற்கை வனப்பு மிக்க ஹந்தான மலைதொடரில் இருந்து பார்க்கும் கண்டி மாநகரம் மிக அழகாக தென்படும்.
இதன் காட்சியை அனைவரும் கண்டு ரசிக்கின்றனர்.
மலை ஏறுபவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களை எடுத்தே செல்கின்றனர்.ஏதேனும் தேவை ஏற்பட்டால் மலையில் இருந்து இறங்குவது கடினம் , என்ற காரணத்தால் நீர், உணவு பொருட்கள் என்பவற்றை எடுத்தே செல்கின்றனர்.
இயற்கை அழகு நிறைந்த ஹந்தான மலை தொடரை பார்வையிட வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விட்டு சொல்லவும்.