இதமான காலை..!
காலை
தென்றல் காற்றுடன் ஒரு சுவாசமான நேசம்
இயற்கையோடு கலந்த இதமான நேசம்
பறவைகளின் கீச்சிடும் குரலில் அருமையான நேசம்
மேகம் எல்லாம் திரண்டு ஓடும் அற்புதமான நேசம்
விரும்பிய பாடலை முணுமுணுக்கும் இசை நேசம்
சாலையோர புற்களின் சிறு சிறு பனித்துளிகளோடு சிங்கார நேசம்
வீடு தோறும் கோலங்கள் அழகிய நேசம்
வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் நான் மட்டும் ஆக்கிரமிப்பு
அற்புதமான தென்றலோடு சுவாசித்துக் கொண்டே விடைபெறுகிறேன்
கவிஞர் நிலவுத்தோழி ஆர் ஜே உமாதேவி