இப்படி ஓர் உறவு உங்களுக்கு இருக்கிறதா..?
உடன் பிறப்பு
உன் தம்பியாக பிறந்த என்னை அன்னையோடு, அன்னையாக.
அண்ணா நீ “யாரு தம்பி என் செல்லத் தம்பி” என அகம் குளிர அனுதினமும் கொஞ்சி மகிழ்ந்தாய்.
பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளி நேரம் முடியம் போதும் பக்குவமாய் என் விரல் பிடித்து அழைத்துச் சென்று .
தூக்கத்தில் நான்
வாய்க்கும் காதுக்கும்
கட்டிமுடித்த எச்சில்
பாலத்தை கிண்டல் செய்த தருணங்கள்
குளிப்பதற்கு நான் நடத்தும்
போராட்டங்களுக்கு என்னை
பிடித்து கொடுத்து முடித்து
வைத்த சாதனைகள்
கைகளில் கட்டிவிட்டக்
காகித “வாட்ச்”களுக்கு இணையாக
கால்களிலும் நான் கேட்டு அடம்பிடித்த
என் குறும்புகள்
வலிக்காத அடிக்கு அப்பாவிடம்
மாட்டிவிட்ட உன் சிணுங்கல்கள்
வயதுவந்த பின்னும் என்னை
தொட்டு பேசி விளையாடும்
உன் உரிமையின் கர்வங்கள்
இவைக்கெல்லாம் சொந்தக்காரன்
என் அண்ணன்
என் உடன் பிறக்கவில்லை!!
உடன் பிறவாமை கீறிய காயங்களுக்கு
மருந்தாய் கிடைத்தது
ஒரு உடன் பிறவா பொக்கிஷம்
அண்ணன் என்ற வடிவில்
கிடைத்தது அறிவு வந்தப்பின்
அன்பு ஒரு ஜீவநதியோ
அதே
என் அண்ணன் பார்வையோ
சிறு சிறு முல்லை பூவினை
மிஞ்சிடும் அன்பு அன்னையே
அண்ணனே
புன்னகை தவிழ்ந்திடும்
உன் பார்வையில்.
அண்ணா என்ற வார்த்தையில்
தானே என் சுவாசம்
அண்ணா உன் அன்பில் தானே
மகிழ்ந்திடும் என் உள்ளம்.
அண்ணன் தங்கை உறவாகும்
அது
ஜென்ம ஜென்மத்தின் வரமாகும்
இந்த புதிய உறவினில் மூழ்கி
தழைத்திட என்ன பாக்கியம்
நான் செய்தேனோ.
உஷா வரதராஜன்.