ராபா மீது தாக்குதல் நடத்த கூடாது என கமலா ஹரிஸ் தெரிவிப்பு..!
இஸ்ரேலானது கடந்த ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது.
இந்நிலையில் வடக்கிலிருந்து புகலிடம் கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்து ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ரபா நகரில் தாக்குதல் நடாத்த கூடாது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
ABC ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதே வேளை இஸ்ரேலிய மக்களும் பாலஸ்தீனிய மக்களும் சம அளவு பாதுகாப்புடன் வாழ உரிமையுடையவர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் எண்டனி பிளிங்கன் ரபா நகர் மீது தாக்குதல் நடத்த கூடாது என வலியுறுத்தியிருந்தார். எனினும் இவரது கோரிக்கையை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.