அரிசி விலையினை குறைக்க கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்..!
நேற்றைய தினம் திருக்கோணமலை நகர சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
இவ்வார்ப்பாட்டமானது அரிசியின் விலையினை குறைக்க கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது பட்டினி சாவு எமக்கு வேண்டாம்,இலங்கை அரசாங்கமே அரிசி விலையை குறைக்க வேண்டும் போனற வாசகங்கள் எழுதிய பதாதைகளை மக்கள் ஏந்திய வண்ணம் போராட்டததில் ஈடுப்பட்டனர்.
மேலும் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரிக்கிறது.ஆனால் டொலரின் பெறுமதி குறையும் போது பொருட்களின் விலை குறைவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக அரிசிக்கான நிர்ணய விலையினை வகுக்க கோரியும், பட்டினி சாவிலுந்து மக்களை காப்பற்ற கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வழியுருத்தப்பட்டது.
இதே வேளை திருகோணமலை நகர் பகுதிகளில் இது தொடர்பான துண்டு பிரசூரமும் விநியோகிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்காணோர் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.