தடகளவீரர் தங்க சாதனையாளர் எதிர்வீரசிங்கம் விடைபெற்றார்
சிறீலங்காவிலிருந்து 1950 களில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியது மட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்த திரு எதிர்வீரசிங்கம் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றார்.
1958 ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ரோக்கியோ நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற எதிர்வீரசிங்கம் அவர்கள் இலங்கைக்கு முதல் தங்கத்தைக் கொண்டு வந்த பெருமைக்குரியவரானார்.
யாழ் மத்தியகல்லூரி பழையமாணவரான எதிர்வீரசிங்கம் அவர்கள், கல்லூரிக் காலத்திலேயே உயரம் பாய்தலில் அதிகூடிய உயரம் பாய்ந்து இலங்கையில்
கல்லூரி கால வெற்றிகளும் சாதனைகளும் அவரை சர்வதேச அளவிலும் பிரகாசிக்க காரணமானது.
1954ம் ஆண்டில் ஆசிய சாதனையை சமப்படுத்தியிருந்த எதிர்வீரசிங்கம் அவர்கள் , 1962 ஜகர்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சாதனைக்குரியவர்.
சிறந்த கல்வியாளராகவும் மிளிர்ந்த திரு எதிர்வீரசிங்கம் அவர்கள் பல்வேறுபட்ட தன்னார்வ அறப்பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
வடக்கு கிழக்கு மலையக மக்களின் கல்வித்தேவைகளை அறிந்து அதனூடாக பெரும் தொண்டுகளை கடந்த காலங்களில் நெறிப்படுத்தி பணியாற்றியிருந்தவர் திரு எதிரவீரசிங்கம் அவர்கள்.
திரு நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் தனது 89 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு விடைபெறும் போது அமெரிக்காவின் கலிபோனியாவில் வாழ்ந்து வந்திருந்தார்.
தடகள தங்க சாதனையாளன் திரு எதிரவீரசிங்கம் அவர்கள் ,யாழ்ப்பாணம் பெரியவிளானை சொந்த இடமாகக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.