ஜனநாயகத்தின் தினம்..!


நமது வாழ்வை ,
நமக்கான சூழலை
நமக்கு நாமே
உருவாக்கிக் கொள்ள …

நமக்குள்
நம்மோடு
வாழ்ந்து வரும்
சிறந்த தலைமையைத்
தேர்வு செய்யும் …
ஜனநாயகத்தின்
நாள் இது …

இதில் நமக்குப்
பிடித்தவர் …
நமக்குத்
தெரிந்தவர் …

இல்லை இவர்
எனக்குப்
பிடிக்காதவர் என
நினைக்காமல் …

இப்போது உள்ள
சூழலுக்கு இவர்
தான் சரியாகச்
செயல்படுபவர்
என நாட்டின்
நலன் கருதி
வாக்களித்து …

ஜனநாயகத்தின்
வெற்றியை
நாம் ஒவ்வொருவரும்
நிறைவேற்றும்
நாள்
இந்தத் தேர்தல் நாள் …

தேசத்தின் நலமே
நம் நலம் …🙏❤️🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *