இந்திய ஜனாதிபதி நாளை அயோத்தி பயணம்..!
இந்திய ஜனாதிபதி நாளைய தினம் அயோத்தியில் அமைந்திருக்கும் இராமரை தரிசிக்க செல்லவுள்ளார்.
அங்கு சென்று இராம் கோவில் மற்றும் அனுமான் கர்ஹி ஆலயத்திற்கும் சென்று தரிசனத்தில் ஈடுப்பட உள்ளார்.இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முர்மு தற்போது தான் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.