TSSA UK இன் உதைபந்தாட்டம்- நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்
தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் நடாத்திய 31 வது உதைபந்தாட்டத் திருவிழாவில், நெல்லியடி மத்திய கல்லூரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அணியை வென்று சம்பியன் கிண்ணத்தை தட்டிச்சென்றது.
உதைபந்தாட்டத் திருவிழாவில் முக்கிய பிரிவுப்போட்டியான,வயதெல்லையற்றோருக்கான போட்டியில்(Open) இறுதிப்போட்டியில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியும் நெல்லியடி மத்திய கல்லூரி அணியும் களமாடின.
இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைக்காத திறமையுடன் இறுதி வரை விறுவிறுப்பாக ஆடி நிறைவில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிவாகை சூடியது.
தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் உதைபந்தாட்டப்போட்டிகளில் நெல்லியடி மத்தியகல்லூரி அணி முதற்தடவையாக வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணி தொடர் சம்பியனாக இந்த வருடமும் வெற்றிபெற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் திருகோணமலை இந்துக்கல்லூரி அணியும் , 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி அணியும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.