TSSA UK துடுப்பெடுத்தாட்டம்|திறந்த போட்டி அட்டவணை தயாரானது|வரும் திங்கட்கிழமை கோடைகால விளையாட்டு விழா

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் TSSA UK வருடம்தோறும் நடாத்தும் கோடைகால விளையாட்டுவிழா, இந்தவருடமும், இங்கிலாந்தின் ஆவணிமாத வங்கிவிடுமுறை நாளாகிய வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.கோடை விளையாட்டுவிழாவின் முக்கிய போட்டிகளாக இடம்பெறும், துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளின் திறந்த போட்டிக்கான போட்டி அட்டவணையும் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் 2020 ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கோவிட் 19 பெருந்தொற்றினால் பல நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்ததைப் போலவே தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்க நிகழ்வுகளும் நடைபற்றிருக்கவில்லை. இந்த வருடமும் அந்த கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு அதற்கு அமைவாகவே கோடை கால விளையாட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துடுப்பாட்டத்தில் மொத்தமாக 17 அணிகள் பங்குபற்றும் திறந்த போட்டியில் 15 பாடசாலை அணிகள் பங்குபற்றுகின்றன.கடந்த 2019 ம் ஆண்டு கோடைகால விளையாட்டு விழாவின் திறந்த போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய யாழ் இந்துக்கல்லூரி அணி இந்த வருடம் முதல் போட்டியில் கொழும்பு இந்துக்கல்லூரி அணியைச் சந்திக்கிறது.

சரியாக 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள கோடைகால விளையாட்டுவிழாவில் 40வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமான சுற்றுப்போட்டியும் சமநேரத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் RAYNES Park Sports Ground இல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *